பங்குச்சந்தைக்கு போலி அறிக்கை அளித்ததாக மூவர் மீது குற்றச்சாட்டு

பங்குச்சந்தைக்கு போலி அறிக்கை அளித்ததாக மூவர் மீது குற்றச்சாட்டு

1 mins read

சிங்கப்பூர் பங்குச்சந்தைக்கு பொய்யான தகவல்களை அளித்ததாகவும் சிங்கப்பூர் பங்குச்சந்தையில் போலியாக பரிவர்த்தனைகளை உருவாக்கி, அழித்து, ஏமாற்று வேலை செய்ததற்காகவும் மூவர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஜிம்மி இங் கியன் பின், 35, மீது ஐந்து குற்றச்சாட்டுகளும் எரிக் இங் சோங் ஹான், 48, மீது நான்கு குற்றச்சாட்டுகளும் ஜோசப் சாய் மிங் லியோங், 42, மீது இரண்டு குற்றச்சாட்டுகளும் பதிவாகின. சிங்கப்பூரர்களான இம்மூவரும் ஜோஎரிக் ஃபைனான்சியல் தனியார் வர்த்தகப் பரிவர்த்தனை நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள். அந்த நிறுவனம் சிங்கப்பூர் பங்குச்சந்தை வர்த்தகத்தில் பதிவு பெற்ற நிறுவனமாகும். ஜிம்மி இங், எரிக் இங் ஆகியோர் சில சமயங்களில் போலியாக பங்குகளை வாங்க, விற்க விண்ணப்பித்து உடனடியாக அதனை மீட்டுக்கொண்டனர்.