உயிரணுக்களைக் கொண்டு நோய் களை குணப்படுத்துவது அல்லது நோய்களைத் தடுப்பது ஆகியவற்றை உள்ளடக்கிய உயிரணு சிகிச்சை முறையே மருத்துவத் துறையின் எதிர்காலம் என்று கருதப்படுகிறது. ஆனால், கட்டுபடியாகக்கூடிய செலவில் அதிக அளவில் தரமான உயிரணுக்களைத் தயாரிப்பதுதான் அதிலுள்ள முக்கிய சவால். சிங்கப்பூர் அதன் உயிர் மருத்துவ உற்பத்தித் துறையில் வலுவாகச் செயல்பட்டு வருகிறது. உயிரணுக்களை உற்பத்தி செய் வது அடுத்த பெரிய பொருளீட்டும் வழி என சிங்கப்பூரின் மூல உயிரணு ஆராய்ச்சி கருதுகிறது. உலக அளவில் உயிரணு உற்பத்தியைப் பெருக்கும் முயற்சி கள் குறைவாகவே இருப்பதாக 'ஏ*ஸ்டார்' அமைப்பின் உயிர் மருத்துவ ஆய்வு மன்றத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர் பெஞ்சமின் சீட் கூறினார். இந்தத் துறையில் அதிக அளவில் முதலீடு செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் உயிர்மருந்தியல் தயாரிப்பை மேம்ப டுத்த முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். சிறிய மூலக்கூறு மருந்துகள், புரதங்கள் போன்ற உயிர்க்கூறுகள் ஆகியவற்றின் உற்பத்தியான உயிர் மருந்தியல் உற்பத்தி சிங்கப்பூருக்கு முக்கியமான பிரிவு. இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4% பங்களிப்பதுடன் 7,700க்கும் அதிகமான உயர்திறன் பணியாளர் களுக்கு வேலைவாய்ப்பு அளித் துள்ளது. உயிரணு உற்பத்தியைப் பெருக்கு தல், பாதுகாப்பு, திறன் தொடர்பான உயிரணுவின் பண்புகள் பற்றிய ஆழ்ந்த புரிதல், உற்பத்தியின்போது அதன் தரத்தை ஆய்வு செய்வதற் கான தொழில்நுட்பத்தை மேம்படுத் துதல் ஆகிய திட்டங்களுக்காக $80 மில்லியன் செலவிடப்பட உள்ளது.
சிகிச்சைக்கான உயிரணுக்களை உருவாக்க $80 மில்லியன் ஊக்குவிப்பு
1 mins read
உயிரணு சிகிச்சைக்காக மூல உயிரணுக்களை மருத்துவ பயன்பாட்டு தரத்தில், அதிக அளவில் உற்பத்தி செய்வதற்கான திட்டங்களுக்காக $80 மில்லியன் ஊக்குவிப்பை அரசாங்கம் வழங்குகிறது. கோப்புப்படம். -