சாங்கி விமான நிலையம் தொடர்ந்து ஏழாவது ஆண்டாக, உலகின் தலைசிறந்த விமான நிலையமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
ஸ்கைட்ரேஸக்ஸ் (Skaytrax) எனும் பிரிட்டனைச் சேர்ந்த விமானத் துறை ஆலோசனை நிறுவனம் 13 மில்லியனுக்கும் மேற்பட்ட பயணிகளிடம் நடத்திய ஆய்வின் முடிவில் இதனைத் தெரிவித்தது.
இந்த விருது தொடங்கப்பட்ட 20-ஆண்டுகளில் சாங்கி விமான நிலையம், இதுவரை 10 முறை உலகின் தலைசிறந்த விமான நிலையமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது சாங்கி விமான நிலையம் தொடர்ந்து வெல்லும் 7வது விருது ஆகும்.
தோக்கியோ அனைத்துலக விமான நிலையம் இரண்டாம் இடத்திலும் தென் கொரியாவின் இஞ்சியோன் அனைத்துலக விமான நிலையம் மூன்றாம் இடத்தையும் பிடித்தன.
இதற்கிடையே, சாங்கி விமான நிலையத்தின் இரண்டாம் முனையத்தில் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு விரிவாக்கத் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் சாங்கி விமானக் குழுமம் தெரிவித்துள்ளது.

