வலிமைமிக்க கடவுச்சீட்டுப் பட்டி யலில் சிங்கப்பூரின் கடவுச்சீட்டு மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகளின் கடவுச்சீட்டுகளும் முதலிடத்தில் உள்ளன. இந்த மூன்று ஆசிய நாடுகளின் கடவுச்சீட்டுகளை வைத்திருப்போர் 189 நாடுகளுக்குச் செல்ல விசா பெறத் தேவையில்லை அல்லது அந்த நாடுகளுக்குச் சென்றடைந் ததும் விசாவை பெற்றுக்கொள்ள லாம். கடந்த ஆண்டு மே மாதத்தில் சிங்கப்பூர் கடவுச்சீட்டு பட்டியலில் இரண்டாவது இடத்துக்குத் தள்ளப்பட்டது. அப்போது ஜப்பானிய கடவுச் சீட்டு முதலிடத்தில் இருந்தது. கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் மீண்டும் முதலிடம் பிடித்த சிங்கப்பூர் கடவுச்சீட்டு கடந்த அக்டோபர், ஜனவரி மாதங்களில் இரண்டாவது இடத்தில் இருந்தது. இந்நிலையில், ஹென்லி கடவுச்சீட்டு குறியீடு ஆக அண்மையில் வெளியிட்ட பட்டிய லில் சிங்கப்பூரின் கடவுச்சீட்டு மீண்டும் முதலிடத்தைப் பிடித் துள்ளது. பட்டியலின் முதலிடத்தில் மூன்று ஆசிய நாடுகளின் கடவுச் சீட்டுகள் இருப்பது ஆசியாவின் வளர்ந்து வரும் வலிமையையும் உலகளாவிய நிலையில் அதற்கு இருக்கும் செல்வாக்கையும் காட்டு வதாக உலகளாவிய குடியுரிமை ஆலோசனை நிறுவனமான ஹென்லி அண்ட் பார்ட்னர்ஸ் கூறியது.
வலிமைமிக்க கடவுச்சீட்டு: சிங்கப்பூர் மீண்டும் முதலிடம்
1 mins read
ST PHOTO: TIMOTHY DAVID -

