சமையற்காரரைத் தாக்கியதை ஒப்புக்கொண்ட ஆடவர்

சமையற்காரரைத் தாக்கியதை ஒப்புக்கொண்ட ஆடவர்

2 mins read

இலவச பரோட்டா கிடைக்காததால் சமையற்காரரைத் தாக்கியதாக 59 வயது பாலசந்திரன் கோதண்டபாணி ஒப்புக்கொண்டார். இரண்டு பேருடன் சேர்ந்து 33 வயது திரு ரவி ஜோஸ் விபினை அவர் தாக்கினார். தாக்குதலின் விளைவாக திரு ரவிக்குத் தலையில் கத்தி வெட்டுக் காயம் ஏற்பட்டது. தாக்குதலில் பயன் படுத்தப் பட்ட கத்தியை வைத்தி ருந்த குற்றத்தை பாலசந்திரன் ஒப்புக் கொண்டார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் 29ஆம் தேதியன்று பாலசந்திரன், 35 வயது ஃபரிசால் ரஹ்மாட், 45 வயது முருகன் ஜோசஃப் ஆகிய மூவரும் மதுபானம் அருந்தி விட்டு மாலை 5.13 மணி அளவில் புளோக் 710 கிளமெண்டி வெஸ்ட் ஸ்திரீட் 2ல் உள்ள பரோட்டா கடைக்குச் சென்றனர். தங்களிடம் பணம் இல்லாத தால் அங்கு அவர்கள் இலவச உணவு கேட்டு பிரச்சினை செய்தனர். இலவச பரோட்டா கிடைக்காததை அடுத்து அவர் கள் அங்கிருந்து சென்றனர். மாலை 5.30 மணி அளவில் முருகனும் ஃபரிசாலும் கடைக்குத் திரும்பி இலவச உணவு கேட்டனர். அவர் களுக்கு பரோட்டாவை இலவச மாகத் தர கடையில் இருந்தவர் கள் மறுத்துவிட்டனர். பத்து நிமிடங்கள் கழித்து மூவரும் கடைக்குத் திரும்ப சென்றனர். திரு ரவி மறுப்பு கூறியதைக் கேட்டு அவர்கள் கோபமடைந்தனர். அங்கிருந்து சென்ற பால சந்திரன் 19 செண்டிமீட்டர் நீளமுள்ள கத்தியுடன் திரும்பி னார். அந்தக் கத்தியைப் பயன் படுத்தி திரு ரவியை முருகன் காயப்படுத்தினார். இந்தத் தாக்குதலைத் திரு ரவி தமது கைபேசியில் பதிவு செய்தார். இந்தப் பதிவை நீதிமன்றம் ஆதாரமாக ஏற்றுக் கொண்டது. திரு ரவிக்கு தேசிய பல்கலைக்கழக மருத்துவமனை யில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் மறுநாள் வீடு திரும்பினார். அவருக்கு 14 நாட்கள் மருத்துவ விடுப்பு வழங்கப்பட்டது. திரு ரவியைத் தாக்கி காயப்படுத்திய முருகனுக்கு 13 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப் பட்டது.