பிசிஎஃப் ஸ்பார்க்கல்டோட்ஸ் நச்சுணவு விவகாரம்: 184 மாணவர்கள் பாதிப்பு

பிசிஎஃப் ஸ்பார்க்கல்டோட்ஸ் நச்சுணவு விவகாரம்: 184 மாணவர்கள் பாதிப்பு

1 mins read
e6e3a7a2-c69d-418d-a2f1-2b2ae9adb2a1
படம்: சாவ் பாவ் -

நான்கு பிசிஎஃப் ஸ்பார்க்கல் டோட்ஸ் பாலர் பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடம் நச்சுண வால் பாதிக்கப்பட்டிருக்கும் அறி குறிகள் ஏற்பட்டிருப்பதாக நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இந்தப் பள்ளிகள் செங்காங் சென்ட்ரல் வட்டாரத்தில் உள்ளன. இந்நிலையில், மேலும் மூன்று பிசிஎஃப் ஸ்பார்க்கல்டோட்ஸ் பாலர் பள்ளிகளில் பயிலும் மாண வர்களும் நச்சுணவால் பாதிக்கப் பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படு கிறது. இந்த மாணவர்கள் செங்காங் சென்ட்ரலில் உள்ள புளோக் 262A, புளோக் 208 மற்றும் பொங்கோல் நார்த்தில் உள்ள நிலையத்திலும் பயில்வதாக பிசிஎஃப் செய்தித் தொடர்பாளர் நேற்று கூறினார். இந்நிலையில், நோய்வாய்ப் பட்டிருக்கும் மாணவர்களின் எண்ணிக்கை நேற்று முன்தினம் மாலை 4 மணி நிலவரப்படி 109லிருந்து 184க்கு உயர்ந்திருப்ப தாக சுகாதார அமைச்சு அறி வித்தது. பாதிப்படைந்துள்ள மாணவர்களில் மருத்துவமனை யில் இருக்கும் ஒன்பது பேரின் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. மாணவர் களின் உடல்நிலையை மிக அணுக்கமாகக் கண்காணித்து வருவதாக பிசிஎஃப் தெரிவித்தது. மொத்தம் 11 பிசிஎஃப் ஸ்பார்க் கல்டோட்ஸ் பாலர் பள்ளிகளுக்கு கேட்ஸ் கேட்டரிங் நிறுவனம் உணவு அனுப்பி வைப்பதாக பிசிஎஃப் தெரிவித்தது. பாதிப் படைந்த முதல் நான்கு நிலையங் களுக்கு இந்த நிறுவனம்தான் உணவு அனுப்பி வைக்கிறது.