தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வயது குறைந்த பெண்களுடன் பாலியல் உறவு: இளைஞருக்கு சீர்திருத்தப் பயிற்சி

1 mins read

மூன்று வயது குறைந்த பெண்களுடன் பாலியல் உறவு கொண்ட இளைஞருக்கு ஓராண்டு சீர்திருத்தப் பயிற்சி விதிக்கப்பட்டுள்ளது. வயது குறைந்த பெண்கள் இருவருடன் பாலியல் உறவு கொண்டதை அடுத்து போதைப்பொருள் உட்கொண்ட குற்றத்துக்காக அந்த 18 வயது இளைஞர் போலிசாரால் கைது செய்யப்பட்டார். பிணையில் விடுக்கப்பட்டதை அடுத்து அவர் இன்னொரு வயது குறைந்த பெண்ணுடன் பாலியல் உறவு கொண்டார். சீர்திருத்தப் பயிற்சியின்போது அவர் கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபடுவார். அதுமட்டுமல்லாது, ஆலோசகர்கள் நடத்தும் கூட்டங்களிலும் கலந்துகொள்ள வேண்டும். தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார். பாதிக்கப்பட்ட வயது குறைந்த பெண்களின் அடையாளத்தைக் காக்க இளைஞரின் பெயர் வெளியிடப்படக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.