கடன்முதலையைப் போல பாசாங்கு செய்து தமது காதலியின் முன்னாள் காதலனிடமிருந்து பணம் பறித்த ஆடவருக்கு இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை, மூன்று பிரம்படிகள் விதிக்கப்பட்டன. தமது முன்னாள் காதலனிடமிருந்து பணம் பறிக்க 27 வயது பெண் திட்டமிட்டதாகவும் அதற்கு முகம்மது சைனால் அப்துல் சைலானியைத் தூண்டியதாகவும் தெரிய வந்துள்ளது. கடன்முதலையைப் போல பாசாங்கு செய்து சைனால் மிரட்டல் விடுத்ததும் அந்த 38 வயது ஆடவர் தமது முன்னாள் காதலியின் வங்கிக் கணக்கில் $8,500 தொகையைச் செலுத்தினார். இரண்டாவது முறை பணம் பறிக்க சைனாலும் அவரது காதலியும் முயன்றபோது போலிசாரால் கைது செய்யப்பட்டனர். அந்தப் பெண்ணுக்கு எதிராகக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவருக்கு எதிரான வழக்கு நிலுவையில் உள்ளது. பாதிக்கப்பட்ட ஆடவரின் அடையாளத்தைக் காக்க அந்தப் பெண்ணின் பெயர் வெளியிடப்படக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
கடன்முதலை போல பாசாங்கு செய்து மிரட்டிப் பணம் பறித்தவருக்குச் சிறை
1 mins read

