உள்ளூர் மற்றும் அனைத்துலக அஞ்சல் கடிதங்களை விநியோகிக்கத் தவறியதற்காக 'சிங்போஸ்ட்' அஞ்சல் விநியோக நிறுவனம் மீது 300,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தகவல், தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் விதித்துள்ள இந்த அபராதம், பிப்ரவரி அன்று சிங்போஸ்ட் நிறுவனத்தின் மீது விதிக்கப்பட்ட அபராதத்தைவிட மூன்று மடங்கு அதிகம். 2018ஆம் ஆண்டில் 'சிங்போஸ்ட்' விதிமுறைகளுக்கு உட்பட்டு நடக்காமல் செயல்பட்ட சம்பவங்களின் எண்ணிக்கை 20 ஆக இருந்தது. 2017ஆம் ஆண்டுக்கான இந்த எண்ணிக்கை ஒன்பதாக மட்டும் இருந்தது.
கெப்பல் பேயிலுள்ள ரிப்லெக்ஷன்ஸ் கூட்டுரிமை வீட்டு வட்டாரவாசிகளுக்குச் சேரவேண்டிய அஞ்சல்களை தபால்காரர் ஒருவர் தூக்கி எறிந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சீனாவைச் சேர்ந்த அந்த தபால்காரர் பணிநீக்கம் செய்யப்பட்டதுடன் அஞ்சல் சேவைகள் சட்டத்தின்கீழ் குற்றம் சாட்டப்பட்டார்.
சீனாவுக்குத் திரும்பிய அவர், சிங்கப்பூருக்கு மீண்டும் வந்தால் கைது செய்யப்படுவார்.

