சிங்போஸ்ட்டுக்கு $300,000 அபராதம்

சிங்போஸ்ட்டுக்கு $300,000 அபராதம்

1 mins read

அஞ்சல் விநியோக சேவைத் தர நிலைகளைக் கடந்த ஆண்டில் பூர்த்தி செய்யவில்லை எனக் கூறி, சிங்போஸ்ட் நிறுவனத்திற்கு தகவல் தொடர்பு, ஊடக மேம் பாட்டு ஆணையம் $300,000 அபராதம் விதித்துள்ளது. இதுநாள் வரையில் அந்நிறு வனத்திற்கு விதிக்கப்பட்ட ஆக அதிக அபராதத் தொகை இது தான். உள்ளூர் அடிப்படைக் கடிதங் களைப் பொறுத்தமட்டில், 98% முதல் 99% கடிதங்களை அடுத்த வேலை நாளுக்குள் விநியோகிக்க வேண்டும் என்றும் இரண்டு வேலை நாட்களுக்குள் 100% கடிதங்களையும் விநியோகித்து முடித்திருக்க வேண்டும் என்றும் அஞ்சல் சேவைத் தரநிலைகள் கூறுகின்றன. இந்த நிலையில், சிங்போஸ்ட் நிறுவனம் 2018ஆம் ஆண்டில் ஒன்பது மாதங்களுக்கு மேல் உள்ளூர் அடிப்படைக் கடிதங்களை இரண்டாவது வேலை நாளுக்குள் முழுமையாக விநியோகிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. அதே போல, நான்கு மாத காலத்திற்கு மேல், பதிவு செய்யப்பட்ட அடிப்ப டைக் கடிதங்களும் இரு வேலை நாட்களுக்குள் முழுமையாக விநி யோகிக்கப்படவில்லை எனக் கூறப்பட்டது. அத்துடன், வெளிநாடுகளில் இருந்து வரும் அடிப்படைக் கடி தங்களை மத்திய வர்த்தக வட்டா ரத்தில் அடுத்த வேலை நாளுக்குள் விநியோகிக்க வேண்டும் என்பது விதிமுறை. கடந்த ஆண்டில் மூன்று மாத காலத்திற்கு அந்த விதியும் பூர்த்தி செய்யப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.