வலிய வந்து சூதாட தூண்டினர்; தோற்றபின் பணத்தை திருப்பிக் கேட்டனர்

வலிய வந்து சூதாட தூண்டினர்; தோற்றபின் பணத்தை திருப்பிக் கேட்டனர்

2 mins read

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சூதாட்டக்கூடம் ஒன்று சிங்கப்பூரர் ஒருவரை அழைத்துச் சென்று, அவரிடம் பணம் கொடுத்து சூதாடி வெற்றி பெற்று பணம் ஈட்டித் தரக் கூறியது. சூதாட்டத்தில் வல்லவரும் தொழிலதிபருமான வோங் இயூ சோய் என்ற அந்த நபரை இதற்காக தனிப்பட்ட விமானம் மூலம் அழைத்து சென்றார் அந்த சூதாட்டக்கூடத்தின் பிரிதிநிதி. 'தி ஸ்டார் கோல்ட் கோஸ்ட் கசினோ' என்ற அந்த சூதாட்ட கூடத்தை தி ஸ்டார் என்டர்டெய்ன் மண்ட் குருப் நடத்துகிறது. இந்த நிறுவனம் டாக்டர் வோங்குக்கு பெரும் பணம் கொடுத்து அவரை சூதாட வைத்தது. ஆனால் இறுதியில் டாக்டர் வோங், ஆஸ்திரேலிய டாலர் 43.2 மில்லியனை (S$41.5 மில்லியன்) சூதாட்டத்தில் இழந்தார். இதைத் தொடர்ந்து தி ஸ்டார் என்டர்டெய்ன்மண்ட் குருப் டாக்டர் வோங்கிடமிருந்து $42 மில்லியன் கோரி அவர் மீது வழக்குத் தொடுத்தது. இந்த வழக்கை எதிர் கொள்ளும் டாக்டர் வோங், முதலில் தாம் ஆஸ்திரேலிய டாலர் காசோலை வசதியைக் கேட்டுப் பெறவில்லை என்றும் சூதாட்டக்கூடம் தானாக முன்வந்து ஆஸ்திரேலிய டாலர் 40 மில்லியனை வழங்கி தம்மை சூதாட அழைத்ததாக தமது தற்காப்புத் தரப்பு வாதத்தில் கூறுகிறார். இது பின்னர் ஆஸ்திரேலிய டாலர் 50 மில்லியனுக்கு உயர்த்தித் தரப்பட்டதாகவும் கூறும் இவர், தாம் 'பக்காரெட்' என்ற சூதாட்ட விளையாட்டை விளையாடியபோது அந்த விளை யாட்டை நடத்துபவர் தவறுகள் செய்ததாகவும் இந்தத் தவறு களைக் கூடத்தின் அதிகாரி எழுத்து மூலமாக ஒப்புக்கொண்ட தாகவும் வாதிடுகிறார். ஒரு கட்டத்தில் தாம் சூதாடு வதிலிருந்து விலக முடிவு செய்த தாகவும் ஆனால், இந்த முடிவைத் தாம் எடுத்த மறுநாளே சூதாட்டக்கூடத்தின் மூத்த அதிகாரி தம்மை சந்தித்து தொடர்ந்து சூதாடுமாறு கேட்டுக் கொண்டதாகவும் டாக்டர் வோங் கூறுகிறார். அப்பொழுது அதுவரை நேர்ந்த தவறுகளுக்கு தாம் பொறுப்பேற்க முடியாது என்பதைத் தெள்ளத் தெளிவாகத் தெரிவித்ததாகவும் இதைத் தொடர்ந்து ஸ்டார் என்டர்டெய்ன் மண்ட் குருப் நிறுவனத்தின் தலைமை நடவடிக்கை அதிகாரி தவறுகள் நடந்துள்ளதை ஏற்றுக் கொண்டு கடிதம் தந்ததாக அவர் வாதிடுகிறார். இந்த வழக்கு குறித்து உயர் நீதிமன்றத்தில் நேற்று வழக் குக்கு முந்தைய கலந்துரையாடல் நடைபெற்றது.