நண்பரின் உயிரைப் பறித்த விபத்து: ஓட்டுநருக்கு சிறை

நண்பரின் உயிரைப் பறித்த விபத்து: ஓட்டுநருக்கு சிறை

2 mins read

பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச் சி ஒன்றுக்கு சென்றுவிட்டு காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்த நண் பர்களுக்கு விபரீதம் காத்திருந்தது. கார் ஓட்டுநர் செய்த தவற்றால் எதிர்திசையில் வந்துகொண்டிருந்த பேருந்து ஒன்று கார் மீது மோதி யதில் காரின் பின் இருக்கையில் இருந்த பயணி உயிரிழந்தார். இச்சம்பவம் கடந்த ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி நிகழ்ந்தது. கவனமின்றி காரை ஓட்டி தோழி ஜாஸ்மின் லிம் ஜியா யான்னின் மரணத்திற்குக் காரண மாக இருந்த 25 வயது ஹொனாமி லாம் சிஸினுக்கு நேற்று இரு வாரச் சிறைத் தண்டனை விதிக் கப்பட்டது. இம்மாதம் 14ஆம் தேதி அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். நான்கு ஆண்டுகளுக்கு அனைத்து வகை வாகனங் களையும் ஓட்டுவதற்கு அவ ருக்குத் தடை விதிக்கப்பட்டது. இந்த விபத்துக்கு முன்னதாக வாகனம் ஓட்டுவதன் தொடர்பில் எந்தவொரு குற்றச்செயலையும் லாம் புரியவில்லை என்று நீதி மன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. உலு பாண்டான் ரோடு அருகே குமாரி லிம்மின் காதலனின் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச் சிக்கு லாமும் அவரது காதலனும் சென்றிருந்தனர். நிகழ்ச்சி முடிய நள்ளிரவு தாண்டிவிட்ட நிலையில், குமாரி லிம்மை காரில் அழைத்துச் சென்று வீட்டில் விட்டுவிட லாம் முன்வந்தார். ஜாலான் அன்னாக் புக்கிட், ஜூரோங் கெச்சில் ரோடு சாலை சந்திப்பில் லாம் காரை நிறுத்தி னார். சாங்கியை நோக்கிச் செல்லும் தீவு விரைவுச்சாலைக்கு வலது புறம் காரை திருப்புவது அவரது நோக்கம். இருப்பினும், அச்சாலையில் நேராகச் செல்லும் வாகனங்களுக் கான போக்குவரத்து விளக்கு பச்சை நிறத்திற்கு மாறியதும் லாம் காரை வலதுபுறம் திருப்பத் தொடங்கினார். இருப்பினும், வலதுபுறம் திரும்பும் வாகனங் களுக்கான போக்குவரத்து விளக்கு பச்சை நிற அம்புக்கு மாறாத நிலையில், லாம் காரை ஓட்டியிருக்கக்கூடாது. எதிர்திசையில் எஸ்எம்ஆர்டி பேருந்து ஒன்று மணிக்கு 59 கிலோ மீட்டர் வேகத்தில் வந்து கொண்டிருந்தது. தனது பாதையில் குறுக்கிட்ட லாமின் கார் மீது மோதுவதைப் பேருந்து ஓட்டுநரால் தவிர்க்க முடியவில்லை. காரின் இடது பக்கம் மீது பேருந்து மோதியதன் தாக்கத்தால் கார் சுழன்றது.