குடிபோதையில் நான்கு பாதசாரிகள் மீது காரை மோதிய ஓட்டுநர்

குடிபோதையில் நான்கு பாதசாரிகள் மீது காரை மோதிய ஓட்டுநர்

1 mins read

தஞ்சோங் பகார் ரோட்டில் 2017ஆம் ஆண்டு டிசம்பர் 7ஆம் தேதி மதுபோதையில் காரை ஓட்டிய முன்னாள் காப்புறுதி முகவர் ஒருவர், சாலை தடுப்பில் நின்றுகொண்டிருந்த நான்கு பாதசாரிகள் மீது மோதினார். லிம் குவோங் ஃபெய், 42, குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதால் கட்டுப்பாட்டை இழந்த குற்றத்தை நேற்று நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். கவனமின்றி காரை ஓட்டி மூன்று பாதசாரிகளுக்கு கடுமையான காயம் விளைவித்தது, போக்குவரத்துக்கு எதிராக காரை ஓட்டியது உள்ளிட்ட இரு குற்றச்சாட்டுகள் தண்டனை விதிப்பதில் கருத்தில்கொள்ளப்படும். நான்காவது பாதசாரிக்கு காயம் விளைவித்ததாக மூன்றாவது குற்றச்சாட்டும் கருத்தில்கொள்ளப்படும். $15,000 பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள லிம்முக்கு ஏப்ரல் 1ஆம் தேதி தண்டனை விதிக்கப்படும்.