நாளைய தடை  குறித்து  மலேசியாவிடம் சிங்கப்பூர் பேச வலியுறுத்து

வாகனம் தொடர்பான குற்றங்களுக்கான அபராதத்தைச் செலுத்தாமல் நிலுவை வைத்திருக்கும் வெளிநாட்டு வாகனமோட்டிகள் நாளை ஏப்ரல் 1முதல் சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதி மறுக்கப்படும் என்று சிங்கப்பூர் அறிவித்திருப்பதன் தொடர்பில் மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கருத்து கூறி உள்ளார்.
சிங்கப்பூருக்கும் மலேசியா வுக்கும் இடையிலானஇருதரப்பு உறவுகளின் பலவீனத்தை இந்த அறிவிப்பு உணர்த்துவதாக பாசிர் கூடாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹசன் அப்துல் கரீம் ஹசன் கூறியதாக ‘த ஸ்டார்’ இணையத் தளம் தெரிவித்துள்ளது. இருநாட்டு மக்களுக்கு இடையில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் இரு அரசாங் கங்களுக்கு இடையில் பிரச்சினை இருப்பதைப்போலத் தோன்றுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். 
இந்தத் தடை, வேலை செய்ய அன்றாடம் சிங்கப்பூருக்குச் செல்லும் ஆயிரக்கண கான மலேசியர்களுக்கு பெரும் சிரமங்களை ஏற்படுத்தும் என்று கூறிய திரு ஹசன், இவ்வாறு ‘தன்னிச்சையாக’ தடையைக் கொண்டுவருவதற்கு முன்பு மலேசியாவிடம் சிங்கப்பூர் கலந்து பேசவேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
குற்றங்களைக் குறைக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக அண்மையில் சிங்கப்பூர் வெளி யிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து மலேசிய எம்.பி.யின் கருத்து வந்துள்ளது. 
வாகனப்புகை வெளியேற்றம், வாகனத்தை தவறாக நிறுத்து தல், உள்ளிட்ட போக்குவரத்து குற்றங்களுக்காக விதிக்கப்பட்ட அபராதத்தை செலுத்த இன்று மார்ச் 31ஆம் தேதி வரை கெடு உள்ளது. பிப்ரவரி மாதம் வரையிலான கணக்குப்படி, வெளிநாட்டு வாகனமோட்டிகள் $32 மில்லியன் அபராதத் தொகையைச் செலுத்தாமல் உள்ளனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon