மோசடிக்காரர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இரு நாள் அமலாக்க நடவடிக்கைகளின் தொடர்பில் ஐந்து பெண்களும் 10 ஆண்களும் போலிஸ் விசார ணைக்கு உதவி வருகின்றனர். அமலாக்க நடவடிக்கைகள் புதன் கிழமை முடிவடைந்தன. பல்வேறு மோசடி, வர்த்தக குற்றங்கள் புரிந்ததாக 44 சம் பவங்களின் தொடர்பில் இந்த 15 சந்தேக நபர்கள் விசாரிக்கப்படுவ தாக போலிஸ் நேற்று கூறியது. கறுப்புப் பணத்தை நல்ல பண மாக்கியதன் தொடர்பிலும் அவர் கள் மீது விசாரணை நடத்தப் படுகிறது. இந்த சம்பவங்களில் மொத்தம் $135,420 இழப்பு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இணைய மோசடிக்காரர்களிடம் ஏமாறாமல் இருக்க சில முக்கிய நடைமுறைகளைக் கடைப்பிடிக்கு மாறு பொதுமக்களை போலிஸ் கேட்டுக்கொண்டுள்ளது. உதாரணத்திற்கு, இணையத் தில் ஒரு பொருளை வாங்குவதற்கு முன்னர் அதன் விற்பனையாளர் பற்றிய பலரின் கருத்துகளைப் படித்து தெரிந்துகொள்ள வேண் டும். ஒரு பொருள் நம்பமுடியாத அளவிற்கு குறைந்த விலையில் விற்கப்பட்டதால் அதை வாங்குவது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
$135,000க்கு மேல் பணம் இழப்பு; 15 சந்தேக நபர்களிடம் போலிஸ் விசாரணை
1 mins read
PHOTO: THE NEW PAPER -

