அதிகமான மாணவர்களிடம் கண்டறியப்படும் 'டிஸ்லெக்சியா'

அதிகமான மாணவர்களிடம் கண்டறியப்படும் 'டிஸ்லெக்சியா'

1 mins read
1eb10017-c1ea-4a15-98ba-e3652d76f5f5
ST PHOTO: VENESSA LEE -

கடந்த காலத்தில் எழுத, வாசிப்பதில் சிரமத்தை எதிர்நோக்கும் பிள்ளையைப் பெரியவர்கள் முட்டாள் என திட்டுவது உண்டு. ஆனால் இதற்கு 'டிஸ்லெக்சியா' எனப்படும் கற்றல் குறைபாடு ஒரு காரணமாக இருக்கலாம் என்பதை இன்றைய காலத்தில் கூடுதலாக அறிந்துள்ளனர். தனது உதவித் திட்டங்களில் சேர்ந்துள்ள மாணவர்களின் எண்ணிக்கை கடந்த பத்து ஆண்டுகளில் இரட்டிப்பாகியுள்ள தாக சிங்கப்பூர் டிஸ்லெக்சியா சங்கம் தெரிவிக்கிறது. கடந்த ஆண்டு 3,115 தொடக்கநிலை, உயர்நிலை மாணவர்கள் அதன் பிரதான எழுத்தறிவுத் திட்டத்தில் சேர்ந் தனர். 2007ல் இருந்த 1,032 மாணவர்களைவிட இது அதிகம். பள்ளிக்குச் செல்லும் மாண வர்களில் நான்கு முதல் 10 விழுக்காட்டினர் வரை கற்றல் குறைபாட்டால் பாதிக்கப்படுகின் றனர். அந்தக் குறைபாடு உடைய வர்களுக்கு எழுத, படிக்க சிரமம் ஏற்படுவதுடன் நினைவாற்றலிலும் பாதிப்பு ஏற்படக்கூடும்.