தீப்பற்றிய மின் ஸ்கூட்டர்; இருவர் காயம்

ஹவ்காங்கில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடு ஒன்றின் வரவேற்பு அறையில் மின்னூட்டம் செய்யப்பட்ட மின் ஸ்கூட்டர் நேற்று முன்தினம் இரவு தீப்பற்றிக் கொண்டது. வீட்டில் இருந்த நால்வர் உடனே வீட்டைவிட்டு வெளியேறினர். இதில் இருவர் காயமடைந்தனர்.
புளோக் 313 ஹவ்காங் அவென்யூ 5ல் ஏற்பட்ட இந்தச் தீச்சம்பவம் குறித்து இரவு 7 மணியளவில் தனக்கு தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
அந்த புளோக்கின் ஏழாவது தளத்தில் தீக்கிரையான இந்தத் தனிநபர் நடமாட்ட சாதனம் தண்ணீரைப் பீய்ச்சி அணைக்கப் பட்டது என்று அது கூறியது.
அந்த வீட்டில் வசிக்கும் 27 வயது ஆடவர் ஒருவர், வரவேற்பு அறையில் தான் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தபோது மின் ஸ்கூட்டர் திடீரென தீப்பிடித்ததாக ‌ஷின் மின் சீன நாளிதழிடம் நேற்று கூறினார்.
முதுகுத் தண்டு பிரச்சினை காரணமாக சக்கரநாற்காலியின் உதவியைச் சார்ந்திருக்கும் அந்த ஆடவர், “இந்தச் சம்பவம் திடீ ரென ஏற்பட்டதால் வீட்டிலிருந்த எந்தவொரு பொருளையும் வெளியே எடுத்துசெல்ல எனக்கு நேரம் கிடைக்கவில்லை. எனது உயிரைக் காப்பாற்றிக்கொள்ள வீட்டு வாசலைவிட்டு தவழ்ந்து சென்றேன்,” என்று கூறினார்.
அவர் வீட்டைவிட்டு வெளி யேறிய அதே வேளையில் வீட்டி லிருந்த அவரது தாயார், வளர்ப்புத் தந்தை, மாமா ஆகியோரும் உடன டியாக வெளியேறிவிட்டனர்.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon