இணையத்தில் 800,000 ரத்த நன் கொடையாளர்களின் தரவுகள் முறைதவறி வெளியான சம்பவத் தில் அவை சட்டவிரோதமாக பெறப்பட்டிருக்கலாம் அல்லது திருடப்பட்டிருக்கலாம் என்று சுகா தார அறிவியல் ஆணையத்தைச் சேர்ந்த மென்பொருள் விற்பனை நிறுவனம் கூறியுள்ளது. முன்னதாக, அந்தத் தரவுகள் அடங்கிய மென்பொருளின் செயலி பாதிக்கப்படும் தன்மை உள்ளதால் அந்தத் தரவுகள் வெளிநாட்டு இணைய பாதுகாப்பு நிபுணர் ஒருவரால் சட்டவிரோதமாக பெறப்பட்டது என்ற கருத்து நில வியது. இதன் தொடர்பில் நேற்று ஆணையத்தின் மென்பொருள் விற்பனை நிறுவனமான செக்யூர் சொலூஷன்ஸ் சென்ற ஆண்டு அக்டோபர் மாதத்துக்கும் இவ் வாண்டு மார்ச் மாதத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் தனது செயலி வேறு பல இணைய முகவரிகளிலிருந்தும் ஊடுருவல் முயற்சிகளை எதிர்கொண்டதால் இதில் சந்தேகம் எழுவதாக கூறி யுள்ளது. எனினும், இந்த ஊடுருவல் முயற்சிகளில் தொடர்புடைய இணைய முகவரிகள் உள்ளூர் முகவரிகளா இல்லை வெளியூர் முகவரிகளிலா என்பதை அது தெரிவிக்கவில்லை
தரவுகள் வெளியான சம்பவம்: திருடப்பட்டனவா என்று போலிஸ் விசாரணை
1 mins read
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ்டைம்ஸ் கோப்புப்படம் -

