முயிஸுக்கு நியமிக்கப்படவுள்ள இரு துணை முஃப்திகள்

முயிஸுக்கு நியமிக்கப்படவுள்ள இரு துணை முஃப்திகள்

1 mins read
9863f9b5-3f2f-4c65-8016-62228e8200f7
முயிஸின் சமயக் கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறைக்கான மூத்த இயக்குநர் முனைவர் நஸிருதீன் நசிர். -
Google News Preferred Icon

சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றத்தின் (முயிஸ்) பணிகள் விரிவடைந்துவரும் வேளையில் இரு துணை முஃப்திகள் நியமிக்கப்படவுள்னர். இஸ்லா மிய விவகாரங்களுக்கான நாட்டின் ஆக உயரிய தலைவரான முஃப்தியின் பணிகளுக்கு அவர்கள் துணைபுரிவர். முயிஸின் சமயக் கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறைக்கான மூத்த இயக்குநரான முனைவர் நஸிருதீன் நசிர், 42, (படம்) இவ்வாண்டு மே 1ஆம் தேதி துணை முஃப்தியாக நியமிக்கப்படுவார். இரண்டாவது துணை முஃப்திக்கான பதவி பிற்பாடு நிரப்பப்படும். முயிஸின் வருடாந்திர பணித்திட்ட கருத்தரங்கில் நேற்று கலந்துகொண்டு உரை யாற்றிய முஸ்லிம் விவகாரங் களுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி இதனை அறிவித் தார். தொழில்நுட்ப மேம்பாடு களின் காரணமாக சமயம் சார்ந்த அறிவுரை பெறுவதில் மக்களின் அணுகுமுறை மாறி யுள்ளதையும் பலதரப்பட்ட குடியேறிகளின் வருகையால் சமுதாயத்தின் தோற்றமும் உருமாறி வருவதையும் சுட்டிய அமைச்சர், முஸ்லிம் சமூகத்தை ஒன்றுதிரட்டி கைதூக்கிவிட முயிஸ் தன்னை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.