ஃபேஸ்புக் நிறுவனர்: இணைய பாதுகாப்புக்கு 4 வழிகளில் தீர்வு

ஃபேஸ்புக் நிறுவனர்: இணைய பாதுகாப்புக்கு 4 வழிகளில் தீர்வு

1 mins read
db18c91b-0061-4796-a81d-5fbdf667e215
படம்: ஏஎஃப்பி -

இன்றைய தொழில்நுட்ப யுகத்தில் ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்க ளுக்கு அதிகப் பொறுப்பு இருப் பதாக அதன் தலைவர் மார்க் ஸக்கர்பர்க் தெரிவித்து உள்ளார். மேலும் இணையத்தளங்களுக்கு புதிய விதிகளை அறிமுகம் செய்ய வேண்டிய கட்டாயமும் தற்போது ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், பொய்ச் செய்திகள் பரப்பப் படுவது போன்ற தற்போதைய சிர மங்களைக் குறைக்க நான்கு வழிகளை பரிந்துரைத்து உள்ளார். துன்புறுத்தக்கூடிய பதிவுகள் தொடர்பாக ஃபேஸ்புக்கின் முடிவு களை மறுபரிசீலனை செய்வதைக் கவனிக்க தனிப்பட்ட குழு அமைப் பது முதல் யோசனை. தேர்தல்கள் நல்லமுறையில் நடந்தேற சட்டம் அவசியம் என்பது இரண்டாவது. அரசியல் விளம்பரம் தொடர்பாக ஃபேஸ்புக் சில மாற் றங்களைச் செய்து வந்துள்ளதாக திரு ஸ்க்கர்பர்க் கூறியுள்ளார். மூன்றாவதாக, தனிப்பட்டவர் களையும் தரவுகளையும் பாதுகாக்க உலகளவிலான ஆற்றல் மிகுந்த, ஒருமித்த கட்டமைப்பு தேவைப்ப டுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் பொதுத் தரவு பாதுகாப்பு விதி முறைகளோடு ஒத்துப்போகக் கூடிய அந்தரங்கப் பாதுகாப்பு விதி களை உலகின் பலர் பரிந்துரைத்து உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு வகுக்கப்படும் விதி முறைகள் தரவு பரிமாற்றக் கொள் கைக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்பது நான்காவது தீர்வு என்று திரு ஸக்கர்பர்க் குறிப்பிட்டுள்ளார்.