சிங்கப்பூரில் வரிசையாக நிகழ்ந்த தரவு சம்பந்தமான சம்பவங்களைத் தொடர்ந்து அரசாங்கச் சேவை முழுமைக்குமான தரவு பாதுகாப்பு நடைமுறைகளை வலுப்படுத்த வும் மறுஆய்வு செய்யவும் புதிய குழு ஒன்றை பிரதமர் லீ சியன் லூங் ஏற்படுத்தி உள்ளார். இந்த 'பொதுத் துறை தரவு பாதுகாப்பு மறுஆய்வுக் குழு' அரசாங்க அமைப்புகள், விற்பனையாளர்கள், அங்கீகரிக்கப்பட்ட மூன்றாம் தரப்பினர் ஆகியோர் தரவுகளை எவ்வாறு திரட்டி பாதுகாக்கிறார்கள் என் பதைக் கவனித்து மேம்பாட்டுக்கான பரிந் துரைகளை வழங்கும். தரவு தொடர்பான சம்பவங்களை அர்சாங்கம் சமாளிக்கும் விதத்தை மேம் படுத்தவும் குடிமக்களின் தரவுகளைப் பாதுகாக்கவும் தேவைப்படும் தொழில்நுட்ப நடவடிக்கைகளையும் திறன்களையும் இந்தக் குழு பரிந்துரைக்கும். அத்துடன் இவற்றை உடனடியாகவும் நீண்டகாலத்திற்கும் நடைமுறைப்படுத்து வதற்கான செயல்திட்டத்தையும் குழு வகுக்கும். இந்தப் புதிய மறுஆய்வுக் குழு வுக்கு துணைப் பிரதமர் டியோ சீ ஹியன் தலைமை ஏற்பார் என்று பிரதமர் அலுவல கம் நேற்று வெளியிட்ட அறிக்கை தெரி வித்தது. தரவு பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பத் தில் நிபுணத்துவம் பெற்ற தனியார் துறை பிரதிநிதிகள், சிங்கப்பூரின் அறிவார்ந்த தேச முயற்சிகளில் ஈடுபட்டுள்ள நான்கு அமைச்சர்கள் ஆகியோர் குழுவில் இடம் பெற்றிருப்பர்.
தரவு பாதுகாப்பு நடைமுறைகளை மறுஆய்வு செய்ய புதிய குழு
1 mins read
-

