தற்காலிகமாக நிறுத்தி வைக் கப்பட்ட ஃபயர்ஃப்ளை மலேசிய விமானம் அதன் சேவைகளை மீண்டும் தொடங்குவது குறித்து விரைவில் அதிகாரபூர்வ அறி விப்பு வெளியிடப்படும் என்று மலேசிய போக்குவரத்து அமைச் சர் ஆண்டனி லோக் தெரி வித்துள்ளார். "சில விவரங்களை இன்னும் நாங்கள் இறுதி செய்துவருகி றோம். ஃபயர்ஃப்ளை சேவைகள் மீண்டும் தொடங்கும் என்று நம் புகிறோம். அதற்கான அதிகார பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும்," என்று திரு லோக் கூறியதாக 'த ஸ்டார்' இணை யத்தளம் தெரிவித்துள்ளது. இருந்தபோதிலும் இந்த அறி விப்பை எந்த நாடு வெளியிட வேண்டும் என்று அவர் குறிப்பிட வில்லை. மேலும், அறிவிப்பு வெளிவரும் தேதி குறித்த அறி குறியையும் திரு லோக் வெளி யிடவில்லை. இது குறித்து ஊட கங்களிடம் தெரிவித்த மலேசிய ஏர்லைன்ஸின் துணை நிறுவன மான ஃபயர்ஃப்ளை, அதிகாரிக ளிடம் இருந்து முறையான அறி விப்பு வந்த பின்னர் சேவைகள் தொடங்கும் என்றது. ஃபயர்ஃப்ளை அதன் சேவை களை சாங்கி விமான நிலையத்தி லிருந்து மாற்றி கடந்த ஆண்டு டிசம்பர் 1 முதல் சிலேத்தார் விமான நிலையத்தில் தொடங்க வேண்டியது. ஆனால், அதே நாளில் சிங்கப்பூருக்கான தனது சேவை களை அந்நிறுவனம் தற்காலிக மாக நிறுத்தியது. சிலேத்தார் விமான நிலையத் திலிருந்து சேவைகளை துவங்க மலேசிய விமானப் போக்குவரத்து ஆணையத்திடமிருந்து அனுமதி கிடைக்காததே சேவை நிறுத் தத்திற்குக் காரணம் என ஃபயர் ஃப்ளை தெரிவித்தது.
ஃபயர்ஃப்ளை விமானம் சிங்கப்பூர் சேவையை மீண்டும் தொடங்கும்
2 mins read
-

