$5.4 மில்லியன் ஆள்மாறாட்டம் மோசடியில் ஐந்தாவது மலேசியர் கைது

$5.4 மில்லியன் ஆள்மாறாட்டம் மோசடியில் ஐந்தாவது மலேசியர் கைது

1 mins read

ஒரு பெண்ணிடமிருந்து கிட்டத்தட்ட $5.4 மில்லியனை 2017ஆம் ஆண்டில் ஆள்மாறாட்டம் செய்து மோசடியில் ஈடுபட்ட வழக்கு தொடர்பில் வெள்ளிக்கிழமை அன்று ஐந்தாவது மலேசிய ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டார். மலேசிய போலிசாரின் உதவியுடன் கோலாலம்பூரில் பிடிபட்ட 21 வயது ஆடவர், நேற்று முன்தினம் சிங்கப்பூருக்குக் கொண்டு வரப்பட்டதாக சிங்கப்பூர் போலிஸ் படை தெரிவித்தது. திருட்டுத்தனமாகப் பெற்றுக் கொண்ட சொத்தை நேர்மையற்ற முறையில் வாங்கியதன் தொடர்பில் இன்று அவர் மீது குற்றம் சாட்டப்படவுள்ளது. சட்டவிரோத செயல்கள் குறித்து சீனாவின் போலிசார் மேற்கொண்ட விசாரணைக்காக தன்னிடமுள்ள அனைத்து பணத்தையும் அதிகாரிகளிடம் ஒப்படைக்கவேண்டும் என 58 வயது பெண்ணை ஏமாற்றிய சம்பவம் தொடர்பில் ஏற்கெனவே நான்கு மலேசிய ஆடவர்கள் கைதாகியுள்ளனர்.