பெற்றோர் இருவரும் விவாகரத்து செய்துகொள்ளும்போதும் தங்களின் பிள்ளைகளுடன் நேரம் செலவிடுவதைத் திட்டம் ஒன்று உறுதி செய்கிறது. இத்திட்டத்தின்கீழ் ஆலோசகர்கள் குடும்பங்களைக் கண்காணிப்பதற்காக வருகையளிப்பர். சென்ற ஆண்டு மட்டும் மொத்தம் 164 குடும்பங்கள் இத்திட்டத்தின் மூலம் பலனடைந்ததாக குடும்ப நீதிமன்றங்களின் பேச்சாளர் தெரிவித்தார். நீதிமன்றத்துடன் சமூக, குடும்ப மேம்பாட்டு அமைச்சும் இணைந்து இத்திட்டத்தைத் தொடங்கியதில் விவாகரத்தால் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு ஆதரவும் பெற்றோர், பிள்ளை உறவுகளைச் சரிசெய்ய உதவியும் அளிக்கப்படுகின்றன. பெற்றோர் தங்களின் விருப்பு வெறுப்புகளை ஒதுக்கிவிட்டு பிள்ளையின் நலனை மட்டும் கருத்தில் கொண்டு செயல்பட இத்திட்டம் கைகொடுக்கும்.
விவாகரத்துக்குப் பின் பிள்ளை வளர்ப்பு; கண்காணிக்க புதிய திட்டம்
1 mins read
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப்படம் -

