ஒன்றரை கிலோ மீட்டர் நடை பயணத்தில் கிட்டத்தட்ட 1,200 பேர், அவர்களுக்கு அருகே மெதுவோட்டத்தில் ஈடுபட்டவர் கள், சைக்கிளோட்டத்தில் கலந் துகொண்டவர்கள் என நேற்று பொதுமக்கள் இவ்வாண்டின் முதல் கார்களற்ற வார இறுதியில் பங்கேற்றுத் தங்கள் பொழுதை மிக உல்லாசமாகக் கழித்தனர். இதன் தொடர்பில் நேற்றைய நடைபயணமும் மற்ற நடவடிக்கை களும் மூன்று நாட்களாக நடை பெற்ற கார்களில்லா நிகழ்ச்சியின் சிறப்பம்சங்களாக அமைந்தன. இவ்வாண்டின் இந்த நிகழ்ச்சி கடந்த வெள்ளிக்கிழமையன்று தெலுக் ஆயர் தொகுதி விழா வாகத் தொடங்கியது. அதில் தெலுக் ஆயர் எப்படி ஒரு காலத்தில் சிங்கப்பூர் கட லோரப் பகுதியாக இருந்தது என் பது உட்பட தெலுக் ஆயர், அமோய் ஸ்திரீட் பற்றி பலரும் அறிந்திராத கதைத் துணுக்கு களைக் கொண்டது. அடுத்த நாளான சனிக்கிழமை அன்று தெலுக் ஆயர், குடிமை வட்டாரத்தை உள்ளடக்கிய இடத் தில், பொதுமக்கள் பாரம்பரிய பொம்மலாட்ட நாடக நிகழ்ச்சி யுடன் கேன்டனிஸ் மொழிப் படத்தைத் திறந்தவெளித் திரை யில் கண்டு களித்தும் தங்கள் பொழுதைப் போக்கினர். இதன் தொடர்ச்சியாக ஞாயிற்றுக்கிழமையன்று கார் களில்லா வாரத்தின் முடிவு நாளில் கார்களற்ற பகுதியை விரிவுபடுத்தி மத்திய வர்த்தக வட்டாரம், பாதுகாக்கப்பட்ட தெலுக் ஆயர் குடிமை வட்டாரப் பகுதியில் 5.5 கிலோ மீட்டர் நீள மெதுவோட்டம், சைக்கிளோட்டம் என மக்கள் கொண்டாடி மகிழ்ந் தனர்.
கார்களில்லா வார இறுதியில் மக்களின் உற்சாக பங்கேற்பு
1 mins read
நேற்று காலை நடந்த நடைபயணத்திற்கு முன் பொதுமக்களுடன் உடற்பயிற்சியில் ஈடுபட்டார் உள்துறை, சுகாதார அமைச்சுகளின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் அம்ரின் அமின் (இடக்கோடி). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

