தன் பயணிகளுடன் கோஜெக் ஓட்டுநர் ஒருவர் வாய்ச்சண்டையில் ஈடுபட்ட காணொளி, சமூக ஊடகங்களில் வலம் வருவதன் தொடர்பில் அந்த ஓட்டுநரே மன்னிப்புக் கேட்டுள்ளதுடன் சம் பவம் தொடர்பில் போலிஸ் புகாரும் செய்துள்ளார். வாகனச் சவாரிக் கான கட்டணம் தொடர்பில் ஓட்டு நருக்கும் வண்டியில் இருந்த வய தான தம்பதிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதை அந்த ஏழு நிமிடக் காணொளிக் காட்சி சித்திரித்திருந் தது. ஆண் பயணி, சவாரியை உறுதிப்படுத்தியபோது அதற்கான கட்டணம் $14.10 என்று குறிப்பிடப் பட்டதாக கூறினார். ஆனால் தனது கைபேசி செயலியில் $21.10 என்ற கட்டணம் காண்பிப்பதாக ஓட்டுநர் திரு ஏரன் ஹெங், திரும் பத் திரும்பக் கூறியவண்ணம் காணொளி அமைந்தது. பின்னர் வாக்குவாதம் சூடு பிடிக்க, தன் நேரத்தை வீணடிக்க வேண்டாம் எனப் பலமுறை ஓட்டு நர் பயணிகளிடம் கூறினார். வாடிக்கையாளர் சேவை அதிகாரி யிடம் கைபேசி வழி பேசிக்கொண்டு இருந்த முதியவரின் பேச்சைக் குறுக்கிடும் வகையிலும் திரு ஹெங் நடந்துகொண்டார். திரு ஹெங்கை குறை கூற வில்லை என்றும் சேவைப் பிரி விடம் இதன் தொடர்பில் தெரிவிப் பதாகவும் ஒரு கட்டத்தில் முதி யவர் விளக்கியபோதும் திரு ஹெங் அவர் பேச்சை இடையிலேயே நிறுத்தினார். ஏழு வெள்ளி வித்தியாசத்துக் காகவா என்று தன் குரலை உயர்த்திப் பதிலளித்ததுடன் தான் ஊக்கத் தொகையைப் பெறுவதற் காக வாகனம் ஓட்டுவதாக அதே உரத்த குரலில் ஓட்டுநர் தெரிவித் தார். தங்களை வாகனத்திலிருந்து இறக்கிவிடும்படி ஆடவர் திரு ஹெங்கிடம் கூறியும் அவ்வாறு செய்ய முடியாது என்றும் சவாரியை இடையிலேயே ரத்து செய்தால் தன்னுடைய சவாரி ஏற்கும் விகி தம் பாதிக்கப்படும் என்றும் ஓட்டு நர் பதிலளித்தார். இதற்கிடையே பெண் பயணி ஓட்டுநரை அமைதிப்படுத்த அவரின் தோள் மீது தன் கையை யும் வைத்தார்.
பயணிகளுடன் வாக்குவாதம்: மன்னிப்புக் கோரிய கோஜெக் ஓட்டுநர்
2 mins read
காணொளியின் ஒரு கட்டத்தில் பெண் பயணி ஓட்டுநரின் தோள் மீது தன் கையை வைத்து அவரை அமைதிப்படுத்த முயற்சி செய்தார். படம்: வான் பாவ் -

