வீடுகளுக்கான எரிவாயுக் கட்டணங்கள் இன்று முதல் ஜூன் 30ஆம் தேதி வரை 3.64 விழுக்காடு குறையும் என்று நேற்று சிட்டி கேஸ் நிறுவனம் தெரிவித்தது. ஏப்ரல் தொடங்கி மூன்று மாதங்களுக்கான கட்டணம், ஒரு கிலோவாட்டுக்கு 0.71 காசு குறைகின்றது. இதன்படி குடியிருப்பாளர்கள் ஒரு கிலோவாட்டுக்கு $18.80 செலுத்துவர். முந்தைய காலாண்டுடன் ஒப் பிடுகையில் எரிபொருள் விலை யில் ஏற்பட்டுள்ள சரிவினால் எரிவாயுக் கட்டணங்கள் இவ்வாறு குறைக்கப்பட்டுள்ளதாக நிறு வனம் கூறியது. எரிசக்தி சந்தை ஆணையம் விதித்துள்ள வழிகாட்டி குறிப்பு கள் அடிப்படையில் நிறுவனம் எரிவாயுக் கட்டணங்களை மறு ஆய்வு செய்து வருவதாகவும் தற் போதைய குறைந்த கட்டணம் ஆணையத்தின் ஒப்புதலைப் பெற்று அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே மின்சாரக் கட் டணமும் அடுத்த காலாண்டில் குறையவுள்ளதாக எஸ்பி குழும மும் நேற்று அறிவித்தது. இதே மூன்று மாதங்களுக்கான மின்சாரக் கட்டணம் சராசரியாக 4.7 விழுக்காடு குறைக்கப்படும் என்று குழுமம் தெரிவித்தது. மின்சார உற்பத்திக்குப் பயன் படுத்தப்படும் இயற்கை எரிவாயு விலை குறைந்ததால், இவ்வாறு மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடிந்ததாக கூறப்பட் டது. இதன்கீழ் முந்தைய காலாண் டுடன் ஒப்பிடும்போது, ஒரு கிலோவாட்டுக்கான கட்டணம் $1.10 குறையும்.
3 மாதங்களுக்கு வீட்டு எரிவாயு, மின்சார கட்டணங்கள் குறையும்
1 mins read
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப்படம் -

