புக்கிட் கோம்பாக்கில் மாபெரும் இயற்கை பூங்கா

புக்கிட் கோம்பாக்கில் மாபெரும் இயற்கை பூங்கா

1 mins read
849a634f-3619-4c7c-ae36-60f34ae9ec75
-

அடுத்த ஆண்டின் முற்பகுதியில் ஏழு காற்பந்து திடல்களுக்குச் சம அளவிலான புதிய பூங்கா ஒன்று புக்கிட் கோம்பாக் பகுதியில் திறக் கப்படவுள்ளது. புக்கிட் பாத்தோக் வெஸ்ட் அவென்யூ 5ல் அமைந்துள்ள வாகனப் பயிற்சி நிலையத்திற்கு எதிரே புதிய புக்கிட் கோம்பாக் பூங்கா அமையவிருக்கிறது. புக்கிட் தீமா இயற்கை பாது காப்பு வனப்பகுதியில் உள்ளது போல் இப்பூங்காவில் 400 மீட்டர் நீளமுள்ள நடைபாதை ஒன்று பொதுமக்களுக்காக அமைக்கப் படும். அருகிவரும் மரவகைகள் உட்பட மொத்தம் 2,000 மரங்களும் இப்பூங்காவில் நடப்படவுள்ளன. கிட்டத்தட்ட 4.8 ஹெக்டர் பரப்பளவிலான இப்பூங்காவை அமைப்பதற்கான பணிகள் நேற்று தொடங்கின. சுகாதார அமைச்சரும் சுவா சூ காங் குழுத்தொகுதியின் நாடாளு மன்ற உறுப்பினருமான கான் கிம் யோங்குடன் லோ யென் லிங்கும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.