இவ்வாண்டின் முதல் காலாண்டில் வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடுகளின் மறுவிற்பனை விலை, இதற்கு முந்தைய காலாண்டுடன் ஒப்புநோக்க 0.3 விழுக்காடு குறைந்ததாக வீவக திங்கட்கிழமை (ஏப்ரல் 1) வெளியிட்ட முன்னோட்டக் கணிப்புகள் குறிப்பிடுகின்றன.
மறுவிற்பனை விலைக் குறியீடு, கடந்தாண்டு இறுதி காலாண்டின் 131.4ல் இருந்து 131க்குக் குறைந்தது. மேல் விவரங்களைக் கொண்ட அறுதியிடப்பட்ட புள்ளிவிவரங்கள் ஏப்ரல் 26ஆம் தேதி வெளியிடப்படும்.
காலாங், வாம்போ, தெங்கா, உட்லண்ட்ஸ் ஆகிய வட்டாரங்களில் தேவைக்கேற்ப கட்டித்தரப்படும் 3,400 வீடுகளை வீவக விற்பனைக்கு விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், கடந்த விற்பனை நடவடிக்கையிலிருந்து எஞ்சியுள்ள வீடுகளின் விற்பனையும் நிகழும்.

