முரளி: சமுதாயத்தைப் பிரிக்க இடம் தரலாகாது

முரளி: சமுதாயத்தைப் பிரிக்க இடம் தரலாகாது

1 mins read
1bf8ca6d-1d76-4c0d-94b2-1c6a276791db
புக்கிட் பாத்தோக் தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் முரளிதரன் பிள்ளை -

இன உணர்வுகளை எழுப்பி சமுதாயத்தைப் பிளவுபடுத்தும் முயற்சி களைத் துணிந்து எதிர்க்க வேண்டும் என்று புக்கிட் பாத்தோக் தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் முரளிதரன் பிள்ளை (படம்) வலியுறுத்தியுள்ளார். எந்தச் சமூகத்திலும் மற்றவர் கள் மீது வெறுப்புகொள்ளும் அள விற்கு சிலர் கருத்துரைக்கக் கூடும் என்ற திரு முரளி, ஆனால் சொல்லும் கருத்துகள் இனப் பிரச் சினைகளைத் தூண்டுமளவிற்குப் போகும்போது கவனமாக இருக்க வேண்டும் என்றார். சிங்கப்பூரில் வெறுப்புணர்வுப் பிரசாரத்தைக் கட்டுப்படுத்தி, இன, சமூக நல்லிணத்தைக் கட்டிக் காப்பதில் அரசாங்கத்தின் அணுகு முறையை திரு முரளி வரவேற் றார். ஆங்கிலத்தில் தமது உரை யைத் தொடங்கிய இவர், இடையில் தமிழிலும் மலாய் மொழியிலும் பேசினார். அண்மையில் வணிகர் ஒருவர் தமிழுக்குப் பதிலாக இந்தி மொழி யில் ஒரு சுற்றறிக்கையை வெளி யிட்டதையும் அதற்கான எதிர் வினைகளையும் இவர் குறிப்பிட்டு பேசினார்.