விவியன்: சர்ச்சைக்குரிய கடல் எல்லைப்பகுதியில் மலேசிய கப்பல்கள்

துவாஸ் வட்டாரத்திற்கு அப்பால் உள்ள சர்ச்சைக்குரிய கடல் எல்லைப் பகுதியில் இரு மலேசிய கப்பல்கள் தொடந்து நங்கூரமிட்டுள்ளன என்று வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் நேற்று நாடாளுமன்றத்தில் கூறினார்.
கடல் எல்லைப் பிரச்சினை தொடர்பாக சிங்கப்பூரும் கோலாலம்பூரும் கடந்த மாதம் ஒப்பந்தம் செய்துகொண்டன. ஆனால் தொடர்ந்து இரு மலேசிய கப்பல்கள் சர்ச்சைக் குரிய பகுதிகளில் இருப்பதால் அந்த ஒப்பந்தத்தை இன்னும் நடைமுறைப்படுத்தவில்லை என்றார் அமைச்சர் விவியன்.
கடந்த மாதம் 14ஆம் தேதி இரு நாடுகளும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் சிங்கப்பூரின் கடல் எல்லைப் பகுதியில் உள்ள கப்பல்கள் வெளியாகவேண்டும். பின்னர் அக்டோபர் 25, டிசம்பர் 6க்கு முன்பு இருந்த கடல் எல்லை நிலைமைக்கு சிங்கப்பூரும் மலேசியாவும் திரும்பும். மேலும் அந்த இடத்தில் வர்த்தக நடவடிக்கைகளோ கப்பல்கள் நக்கூரமிடுவதோ கூடாது என்பதும் ஒப்பந்தத்தில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள். சிங்கப்பூர் கடல் எல்லைப்பகுதியில் தொடர்ந்து சிங்கப்பூர் கப்பல்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபடும் என்று கூறிய டாக்டர் விவியன், இம்மாதம் 14ஆம் தேதிக்குள் பரிந்துரைகள் நிறைவேற்றப்பட்டால், கடல் எல்லைப்பகுதி சர்ச்சையை குறித்த பேச்சுவார்த்தைகளும் ஒரு மாதத்தில் தொடங்கும் என்று குறிப்பிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!