'போயிங் 737 மேக்ஸ்' ரக விமான சேவை தடை தொடரும்

'போயிங் 737 மேக்ஸ்' ரக விமான சேவை தடை தொடரும்

1 mins read
15bc1287-33c9-4171-b688-f25ad205115f
போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி -

சிங்கப்பூரின் 'போயிங் 737 மேக்ஸ்' ரக விமானங்களின் தற்காலிக சேவை நிறுத்தம், அவற்றின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அதிகாரிகள் முழு திருப்தி அடையும் வரை தொடரும் என்றும் மற்ற 'போயிங்' ரக விமானங்களின் சேவை வழக்கம் போல தொடரும் என்றும் போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி கூறியுள்ளார். மற்ற போயிங் ரக விமானங்களில் பாதுகாப்பு பிரச்சினைகள் இருப்பதாக எந்த தடயங்களும் இல்லை என்றும் அவர் நேற்று நாடாளுமன்றத்தில் சொன்னார். "தற்போது சிங்கப்பூர் இயக்கும் 'போயிங் 737 மேக்ஸ்' ரக விமானங்கள் தொடர்பான அனைத்து பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் திருப்தி அடைந்த பிறகே சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் அந்த விமானங்களின் சேவை தடையை நீக்கும்," என்றார் அமைச்சர் ஜனில்.