சுடச் சுடச் செய்திகள்

ஹைஃபிளக்ஸ் நிறுவனத்தைக் காப்பாற்ற வரிப்பணத்தைப் பயன்படுத்த முடியாது

துவாஸ் ஸ்பிரிங் நீர் சுத்திகரிப்பு ஆலையை கடனில் தத்தளிக்கும் ஹைஃபிளக்ஸ் நிறுவனத்திடம் இருந்து எடுத்துக்கொண்டதற்கு இழப்பீடு கோருவது நஷ்டமாகவே அமையும் என்று சுற்றுப்புற நீர்வள அமைச்சர் மசகோஸ்  ஸுல்கிப்ளி நேற்று நாடாளுமன்றத்தில் கூறினார். ஹைஃபிளக்ஸ் நிறுவனத்திற்கு நெருக்கடி கொடுக்கலாம். ஆனால், எந்தப் பலனுமில்லை என்றார் அவர்.
இந்த விவகாரத்தில் ஹைஃபிளக்ஸ் நிறுவனத்திடமிருந்து எதுவும் கிடைக்காது என்பதால், எந்தவித இழப்பீடுக்கும் கோரிக்கை விடுப்பதில்லை என முடிவுசெய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 
ஹைஃபிளக்ஸ் நிறுவனத்திடமிருந்து மதிப்பற்ற சொத்தைப் பெறுவதற்கு வரிப்பணத்தைப் பயன்படுத்துவதை அரசாங்கம் எவ்வாறு நியாயப்படுத்துகிறது என்று நீ சூன் நாடாளுமன்ற குழுத்தொகுதி உறுப்பினர் லீ பீ வா கேட்ட கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார். 
ஏப்ரல் 30ஆம் தேதி காலக்கெடுவுக்குள் பிரச்சினை களுக்குத் தீர்வு காணத் தவறினால், பொதுப் பயனீடுக்குக் கழகத்திடம் துவாஸ் நீர் சுத்திகரிப்பு ஆலையை ஹைஃபிளக்ஸ் நிறுவனம் $0க்கு விற்க வேண்டும்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon