இணையத்தில் பொய்ச் செய்தி பரப்பினால் சிறை, அபராதம்

இணையத்தில் பொய்ச் செய்தி பரப்பினால் சிறை, அபராதம்

2 mins read
edd69460-8a63-4272-83c8-4abffc958308
படம்: தி நீயூபேப்பர் -

பொய்ச் செய்தியிலிருந்து சமு தாயத்தைப் பாதுகாக்கும் வகை யில் பொது நலனுக்குத் தீங்கு விளைவிக்கும் நோக்கத்தில் இணையத்தில் பொய்ச் செய்தி பரப்புவோருக்கு 10 ஆண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கும் நகல் சட்டம் உருவாக்கப் பட்டுள்ளது. ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடங்கள் உட்பட்ட இணையத் தளங்கள், அத்தகைய பொய்ச் செய்திகளை அகற்றுவதன் மூலமோ அல்லது அச்செய்திக்கு அருகே திருத்தங்களை வெளியிடு வதன் மூலமோ பொய்ச் செய்தி பரவலைத் தடுக்க விரைந்து செயல்பட வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் $1 மில்லியன் வரையில் இணையத் தளங்களுக்கு அபராதம் விதிக்கப்படும். அவ்வாறு திருத்தங்களை வெளியிட அல்லது செய்திகளை அகற்ற தனிமனிகளுக்கும் உத் தரவிடப்படும். அவ்வாறு செய்ய மறுத்தால் $20,000 வரை அபராத மும் 12 மாதங்கள் வரை சிறைத் தண்டனையும் விதிக்கப்படும். இணையப் பொய்ச் செய்தி, இணையத்தை தவறாகப் பயன் படுத்துவதற்கு எதிரான பாது காப்புச் சட்டம் நேற்று நாடாளுமன் றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. பொய்ச் செய்திக்கு எதிரான சிங்கப்பூரின் நடவடிக்கைகளுக்கு இச்சட்டம் வலுசேர்க்கும். இணையத்தில் தவறான தகவல் பரவலைத் தடுக்க உலக நாடுகள் கடுமையான முயற்சிகளை எடுத்து வரும் வேளையில் இச்சட்டத்தை சிங்கப்பூர் உருவாக்கி உள்ளது. பரிந்துரைக்கப்பட்டுள்ள இந்தச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க, இரு அம்சங்கள் இருக்க வேண்டும். ஒன்று, இணையத்தில் பதிவேற்றப்பட்டது பொய்த் தகவலாக இருக்க வேண்டும். மற்றது அரசாங்கம் நடவடிக்கை எடுக்கக்கூடிய அளவுக்கு பொது நலன் அடங்கியிருக்க வேண்டும். கருத்துகள், விமர்சனங்கள், கேலி கிண்டல் பேச்சு போன்றவை இச்சட்டத்தின் கீழ் வராது. மேலும், தவறான கூற்றுகள் இன்றி மக்கள் அரசாங்கத்தை விமர்சித்தாலும் இச்சட்டத்தை மீறியவர்களாக கருதப்பட மாட்டார்கள்.