அடுத்த இரண்டு வாரங்களுக்கு வெப்பமான பருவநிலை தொடர்ந்து நிலவினாலும் கூடுதல் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.மார்ச் மாதத்திற்கு இறுதியில் மழைப்பருவம் தொடங்கியதால் முந்தைய மாதங்களைக் காட்டிலும் மழை அதிகம் பெய்யும் என்று சிங்கப்பூர் வானிலை ஆய்வகம் திங்கட்கிழமை (ஏப்ரல் 1) தெரிவித்தது.
ஆசிய வட்டாரத்தில் மென்மையான காற்று வீசும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது. இந்நிலை மே மாதம் வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் காலக்கட்டத்தில் சிங்கப்பூரிலும் சுற்றுவட்டாரத்திலும் அதிக மழை பெய்யும். இவ்வாண்டின் இரண்டாம் ஆக வெப்பமான மாதமாக ஏப்ரல் மிருக்கும் என்றும் இந்த மாதத்தில் வழக்கமாக அதிக மின்னல் வெட்டும் என்றும் குறிப்புகள் காட்டுகின்றன.
ஏப்ரலின் முதல் இரண்டு வாரங்களுக்கான மழைப்பொழிவு ஏறக்குறைய சாதாரண அளவில் இருக்கும் என்றது ஆய்வகம். தினசரி வெப்பநிலை சில நாட்களில் 35 டிகிரி செல்சியல் வரை எட்டலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலான நாட்களுக்கு அது 25 டிகிரிக்கும் 34 டிகிரிக்கும் இடைப்பட்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.
மார்ச் மாதத்தில் சிங்கப்பூரில் வழக்கத்தைவிட அதிக வெப்பமும் வறண்ட பருவநிலையும் நிலவின.

