போயிங் 787-10 விமானங்களின் சேவைகளை ரத்து செய்யும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்

போயிங் 787-10 விமானங்களின் சேவைகளை ரத்து செய்யும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்

1 mins read
3fccc7de-f1dd-462e-a8d2-98dbde33ca88
-

இயந்திரக் கோளாறுகளின் காரணமாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், போயிங் 787-10 ரகத்தைச் சேர்ந்த பத்து விமானங்களை ரத்து செய்ய முடிவெடுத்துள்ளது.

ஆக அண்மையில் 'ரோல்ஸ்-ராய்ஸ் 1000 டிரென்ட்' இயந்திரங்கள் இந்த விமானங்களுக்குப் பொருத்தப்பட்டுள்ளன. பழுதடைந்த '1000 டிரென்ட்' இயந்திரத்தின் மேம்பட்ட வடிவங்களாக இவை உள்ளன. ஆயினும், இதே பழுது புதிய இயந்திரத்தையும் பாதிப்பதாக 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' நாளிதழ் தெரிவித்தது.

இந்தப் பிரச்சினை முதன்முதலாக ஜப்பானின் நகோயா நகரில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதற்கிடையே, 'சில்க்ஏர்' நிறுவனம் தனது 'போயிங் 737 மேக்ஸ் 8' விமான சேவையின் நிறுத்தத்தால் பாதிப்படைந்துள்ளது.