வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளில் வசிக்கும் கிட்டத்தட்ட 930,000 குடும்பங்கள், தங்களது பயனீட்டுக் கட்டணச் செலவுகளை ஈடுகட்டுவதற்காகப் பொருள் சேவை வரி பற்றுச்சீட்டுக்களை பெறுவர்.
இந்தக் குடும்பங்கள் 100 வெள்ளி வரையிலான 'யூ-சேவ்' தள்ளுபடியை இந்தக் காலாண்டில் பெறுவர் என்று நிதியமைச்சு செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 2) தெரிவித்தது. தள்ளுபடியின் அளவு, பற்றுச்சீட்டு வாங்கும் குடும்பத்தின் வீட்டைப் பொறுத்துள்ளது.
ஓர் அறை, இரண்டு அறை வீடுகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு 100 வெள்ளி வழங்கப்படும்.
மூன்று அறை வீடுகளில் இருக்கும் குடும்பங்களுக்கு 90 வெள்ளி வழங்கப்படும்.
நான்கு அறை வீடுகளில் இருக்கும் குடும்பங்களுக்கும் ஐந்து அறை வீடுகளில் இருக்கும் குடும்பங்களுக்கும் முறையே 80 வெள்ளியும் 70 வெள்ளியும் கொடுக்கப்படும். எக்சிகியூட்டிவ் வீடுகளில் இருப்போருக்கு 60 வெள்ளி தரப்படும்

