சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தை உலகின் தலைசிறந்த விமான நிறுவனமாக 'ட்ரிப்அட்வைசர்' பயண ஆலோசனை இணையத்தளம் தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டும் அறிவித்திருக்கிறது.
இது குறித்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி கோ சூ போங் கூறுகையில், " மாண்பு பொருந்திய இந்த விருதை மீண்டும் பெற்றது குறித்து நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்," என்று தெரிவித்தார்.
தொடர்ந்து ஆதரவு அளித்து வாடிக்கையாளர்களுக்கும் அவர்களது அனுபவம் சிறப்பாக இருப்பதை உறுதிசெய்யும் ஊழியர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக அவர் கூறினார்.
அனைத்துலக சமூகத்தினரது விமர்சனங்களின் அடிப்படையில் விருதுகளின் வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதாக 'ட்ரிப்அட்வைசர்' தளத்தின் தலைவர் திரு பிரையன் சால்ட்ஸ்பர்க் தெரிவித்துள்ளார்.

