தெம்பனீஸ் விரைவுச்சாலையில் மூன்று வாகனங்களுக்கு இடையே விபத்து நடந்ததை அடுத்து 28 வயது மோட்டார் சைக்கிளோட்டி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
செங்காங் புறச்சாலைக்கு அருகே விபத்து நடந்ததாக அதனை நேரில் கண்ட ஒருவர் ஸ்டாம்ப் செய்தித்தளத்திடம் தெரிவித்தார். காருக்கும் டாக்சிக்கும் நடுவே சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் திடீரென டாக்சியின் மீது மோதியது.
தீவு விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் தெம்பனீஸ் விரைவுச்சாலையில் ஏற்பட்ட இந்த விபத்து பற்றிய தகவல் காலை சுமார் 8.30 மணிக்கு தங்களுக்குக் கிடைத்ததாக போலிசார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்த 28 வயது ஆடவர் சுயநினைவுடன் சாங்கி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார் என்று போலிஸ் பேச்சாளர் கூறினார்.

