ஈசூன் அணைக்கு அருகே தலைகீழாகக் கவிழ்ந்த கார்; ஓட்டுநர் காயம்

ஈசூன் அணைக்கு அருகே சென்று கொண்டிருந்த கார் திடீரென சறுக்கித் தலைகீழாகக் கவிழ்ந்த சம்பவத்தில் காரின் 40 வயது ஓட்டுநர் காயமடைந்துள்ளார்.

ஈசூன் அவென்யூ 8-ஐ நோக்கிச் செல்லும் ஈசூன் அவென்யூ 1-ல் நேர்ந்த விபத்து குறித்த தகவல் பின்னிரவு 12.30 மணிக்குக் கிடைத்ததாக போலிசார் கூறினர்.

கவிழ்ந்த காரைக் காட்டும் படம் ஒன்று ‘ஸ்டாம்ப்’ தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. விபத்தின்போது அந்தக் காருக்குள் பயணிகள் இருந்தார்களா என்பது தெரியவில்லை.

ஓட்டுநர் சுயநினைவுடன் கூ டெக் புவாட் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். 

சம்பவத்தைப் போலிசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon