தள்ளாடிய டாக்சி தூணில் மோதியது

தள்ளாடிய டாக்சி தூணில் மோதியது

1 mins read
5c084377-1d31-4248-a92d-c3cbe0a4246c
-

வழியில் சென்றுகொண்டிருந்த ஒரு டாக்சியோடு இந்த டாக்சி மோதிய வேகத்தில் நிலைகுலைந்து தள்ளாடியது. இறுதியில் வீவக புளோக்கின் வெற்றுத்தளத்தூணில் மோதி சேதமடைந்து நின்றது. தோ பாயோ சென்ட்ரலில் உள்ள ஒரு சிறிய சாலையில் இரு வாகனங்கள் விபத்தில் சிக்கியது குறித்து நண்பகல் நேரத்தில் தகவல் கிடைத்ததாக போலிசார் தெரிவித்தனர்.

டிரான்ஸ்கேப் டாக்சி ஒன்றும் கம்ஃபர்ட் டாக்சி ஒன்றும் சம்பவ இடத்தில் காணப்பட்டதை ஊடகங்களில் வலம் வந்த படங்களும் காணொளிக் காட்சிகளும் சித்திரித்தன. டிரான்ஸ்கேப் டாக்சி பின்புறம் மோதியதில் கம்ஃபர்ட் டாக்சி மக்கள் நடைமேடை மீது சென்று தோ பாயோ லோரோங் 2ல் உள்ள புளோக் 175 கீழ்த் தளத்தின் தூணை இடித்து நின்றது.

இரு டாக்சி ஓட்டுநர்களில் ஒருவரான 62 வயது ஆடவர் சுயநினைவுடன் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக போலிசார் கூறினர். அத்துடன் சம்பவ இடத்தருகே இருந்த மூன்று பேரங்காடி தள்ளு வண்டிகளும் சேதமடைந்ததாக ‌ஷின் மின் நாளிதழ் தெரிவித்தது. சம்பவம் குறித்து விசாரணை தொடர்கிறது.