தடை நடப்புக்கு வந்ததால் சிங்கப்பூர்- மலேசிய பாலங்களில் வாகன நெரிசல்

தடை நடப்புக்கு வந்ததால் சிங்கப்பூர்- மலேசிய பாலங்களில் வாகன நெரிசல்

1 mins read

துவாஸ் சோதனைச் சாவடியிலும் கடற்பாலத்திலும் நேற்று முன் தினம் கடும் வாகன நெரிசல் காணப்பட்டது. அபராதத் தொகை பாக்கி வைத்திருக்கும் வெளிநாட்டு வாகனங்களின் ஓட்டுநர்கள் மீது சிங்கப்பூர் நடவடிக்கை எடுக்கத் தொடங்கியதே அந்த நெரிசலுக்குக் காரணம் என்று கூறப்பட்டது. வேலைக்காக சிங்கப்பூருக்கு வரக்கூடிய ஏராளமான மலேசி யர்கள் வாரத்தின் முதல்நாளான திங்கட்கிழமை தங்களது பயணத்தைத் தொடர்ந்தபோது கடற்பாலத்திலும் கெலாங் பாத்தா அருகே உள்ள இரண்டாவது பாலத்திலும் நெரி சலில் சிக்கிக்கொண்டதாக 'த ஸ்டார்' செய்தி கூறியது. ஓட்டுநர்கள் தங்களது அபராத பாக்கித் தொகையைச் செலுத்த வாகனங்களை ஆங் காங்கே நிறுத்தியதால் துவாஸ் சோதனைச் சாவடி அதிக நெரி சலுக்கு ஆளானதாக கேத்லீன் ஆன் கிளி, 282, என்னும் மலே சியர் தெரிவித்தார். மலேசிய தரப்பில் உள்ள சோதனைச் சாவடி கூடங்கள் போதுமானதாக இல்லாததால் ஏற்கெனவே நெருக்கடி நிலவி வந்த வேளையில் சிங்கப்பூர் விதித்த தடை காரணமாக அந்த நிலைமை மேலும் மோசமானதாக அவர் குறிப்பிட்டார். வாகனப் புகை வெளியேற்றம், வாகன நிறுத்தம், போக்குவரத்து ஆகியவற்றில் விதிகளை மீறிய தற்காக அபராதம் விதிக்கப்பட்ட வெளிநாட்டு வாகனமோட்டிகள் $32 மில்லியனுக்கு மேல் பாக்கி வைத்திருப்பதாக அண்மையில் தெரிவித்த சிங்கப்பூர், ஏப்ரல் 1ஆம் தேதிக்குள் பாக்கித் தொகையைச் செலுத்தாத வாக னமோட்டிகள் சிங்கப்பூருக்குள் நுழையத் தடை விதிக்கப்படும் என்று அறிவித்திருந்தது.