ஜோகூரின் தீ, ரசாயனக் கசிவு: சிங்கப்பூருக்குப் பாதிப்பு இல்லை

ஜோகூரின் தீ, ரசாயனக் கசிவு: சிங்கப்பூருக்குப் பாதிப்பு இல்லை

1 mins read

ஜோகூர் பாருவில் கடந்த மாதத்தில் நிகழ்ந்த தீச் சம்பவங் களாலும் ரசாயனக் கழிவுச் சம்பவத்தாலும் சிங்கப்பூரின் காற்று மற்றும் தண்ணீர் தரத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற் படவில்லை என்று சுற்றுப்புற, நீர்வள அமைச்சு மற்றும் சுகாதார மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் தெரிவித்தார். பிப்ரவரி முற்பகுதியிலும் மார்ச் நடுப்பகுதியிலும் ஜோகூ ரின் குப்பை கொட்டும் இடங்களிலும் செம்பனைத் தோட் டத்திலும் ஏற்பட்ட தீச் சம்பவங்களால், சிங்கப்பூரின் வடக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் பொசுங்கும் வாடை வீசியது. அப்படி இருந்தும் சிங்கப்பூரின் காற்றுத் தரத்தில் எவ்வித பாதிப்பும் தென்படவில்லை என்று நீ சூன் குழுத் தொகுதி உறுப்பினர் லீ பீ வா கேட்ட கேள்விக்குப் பதிலளிக்கும்போது அமைச்சர் இவ்வாறு விளக்கினார். மேலும் பாசிர் கூடாங்கில் உள்ள, கிம் கிம் ஆற்றில் ரசாயனக் கழிவை ஒரு நிறுவனம் சட்டத்துக்குப் புறம்பான வகையில் கொட்டியதன் தொடர்பிலும் சிங்கப்பூருக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று குறிப்பிட்ட டாக்டர் கோர், சிங்கப்பூருக்கு தண்ணீர் விநியோகம் செய்யும் ஜோகூர் ஆறு, கிம் கிம் ஆற்றுப் பகுதிக்கு அப்பால் உள்ளது என்பதால் பாதிப்பு இல்லை என்று விவரித்தார். ஜோகூர் நீரிணையில் உள்ள சிங்கப்பூர் மீன் பண்ணை களுக்கும் பாதிப்பில்லை.