'பிஎம்இடி' பிரிவில் சிலரே கடந்த ஆண்டில் ஆட்குறைப்புக்கு ஆளாகினர்

'பிஎம்இடி' பிரிவில் சிலரே கடந்த ஆண்டில் ஆட்குறைப்புக்கு ஆளாகினர்

1 mins read

கடந்த ஆண்டில் சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகளைக் கொண்ட ஊழியரணியில் ஆட்குறைப்பு செய்யப்பட்டோரில் பெரும்பாலோர் நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள், தொழில்நுட்பர்கள் (பிஎம்இடி) பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றாலும் அந்தப் பிரிவைத் தனித்துப் பார்த்தால் நான்கு ஆண்டுகளில் கடந்த ஆண்டில்தான் மிகக் குறைந்த அளவில் ஆட்குறைப்பு செய்யப்பட்டனர் என்று மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ நேற்று முன்தினம் நாடாளு மன்றத்தில் தெரிவித்தார். கடந்த ஆண்டின் 'பிஎம்இடி' பிரிவில் 5,400 பேர் ஆட் குறைப்பு செய்யப்பட்டனர். அது 2014ஆம் ஆண்டிலிருந்து ஆகக் குறைவானது. 'பிஎம்இடி' பிரிவுக்கான நீண்டகால வேலை யின்மை விகிதம் 0.8% ஆக இருக்கிறது. 'பிஎம்இடி' பிரிவில் தற்போது 31,500 வேலை வாய்ப்புகள் உள்ளன. இது கடந்த சில ஆண்டுகளில் ஆக உயர்வா னது. கடந்த ஆண்டில் மட்டும் 34,000 'பிஎம்இடி' பிரிவி னர் வேலையில் இருந்தனர் என்றும் அமைச்சர் கூறினார்.