சுடச் சுடச் செய்திகள்

24 இடங்களில் கல்வி அமைச்சின் பாலர் பள்ளிகள்

கல்வி அமைச்சின் 22 தொடக்கப் பள்ளிகளிலும் இரண்டு சமூக இடங்களிலும் பாலர் பள்ளிகள் நடத்தப்படுகின்றன என்றும் இவ்வாண்டு பாலர் பள்ளி முதலாம் வகுப்புக்கு சுமார் 2,700 மாணவர்களுக்கான இடங்கள் உள்ளன என்றும் கல்வி அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்தார்.

கல்வி அமைச்சின் பாலர் பள்ளிகளுக்கான வரவேற்பு சிறப்பாக உள்ளது என்றும் அனைத்து நிலையங்களிலும் சுமார் 85% இடங்கள் நிரப்பப்பட்டுவிட்டன என்றும் திரு ஓங் கூறினார்.

“தொடக்கப் பள்ளிகளில் நடத்தப்படும் பாலர் பள்ளிகளின் எண்ணிக்கை 2023ஆம் ஆண்டுக்குள் 50க்கு உயரும்.

“கல்வி அமைச்சு, ஆரம்பக்கால பாலர் பருவ மேம்பாட்டு வாரியத்துடன் இணைந்து எந்தெந்த பகுதிகளில் மாணவர்களின் தேவை அதிகமாக உள்ளது என்பதை ஆராய்ந்து அதன்படி நிலையங் களின் எண்ணிக்கையை உயர்த் தும் என்றும் அமைச்சர் ஓங் விளக்கினார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon