பொது நடைபாதைகளில் தனிநபர் நடமாட்ட சாதனங்கள் தொடர் பான 228 விபத்துகள் 2017ஆம், 2018ஆம் ஆண்டுகளில் நிகழ்ந் தன என்றும் அவற்றில் 196, காயம் விளைவித்த சம்பவங்க ளாக அமைந்தன என்றும் போக் குவரத்து அமைச்சர் கோ பூன் வான் தனது எழுத்துபூர்வ பதி லில் தெரிவித்தார். கடந்த இரண்டு ஆண்டுக ளில் தனிநபர் நடமாட்ட சாதனம் தொடர்பான எத்தனை கடு மையான விபத்துகள் நிகழ்ந்தன என்று தெம்பனிஸ் குழுத் தொகுதி உறுப்பினர் டெஸ்மண்ட் சூ கேட்ட கேள்விக்கு திரு கோ பதிலளித்தார். இரு ஆண்டுகளில் நிகழ்ந்த விபத்துகளில் ஒன்று உயிர்க் கொல்லி விபத்தாக அமைந்தது. அதில் தனிநபர் நடமாட்ட சாத னத்தை ஓட்டிச் சென்றவர், சறுக்கி கடுமையான காயங்க ளுக்கு ஆளாகி, பின்னர் மரண முற்றார். 32 சம்பவங்களில் பாதிக்கப்பட்டோருக்கு எலும்பு முறிவுகள், தலைக்காயங்கள் போன்ற கடுமையான காயங்கள் ஏற்பட்டன. தனிநபர் நடமாட்ட சாதனங் களைப் பயன்படுத்துவோர் மூன் றாம் தரப்பு காப்புறுதி பெற்றுக் கொள்ளுமாறு உந்து நடமாட்ட ஆலோசனைக் குழுவும் நிலப் போக்குவரத்து ஆணையமும் கேட்டுக்கொள்கின்றன என்றும் அமைச்சர் கோ விவரித்தார்.
இரண்டு ஆண்டுகளில் 228 தனிநபர் நடமாட்ட சாதன விபத்துகள்
1 mins read

