ஒரு தொழில்முறை சிங்கப்பூர் ஆயுதப்படை வீரர், முழு நேர தேசிய சேவையாளர் ஆகிய இரு வர் சம்பந்தப்பட்ட மரணங்கள் கடந்த ஆண்டு ஜூலை, செப்டம்பர் மாதங்களில் சிங்கப்பூர் ஆயுதப் படை வளாகங்களில் நிகழ்ந்தன. அந்த இரு மரணங்களும் இயற்கைக்கு மாறானவை என்று வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவை பயிற்சியுடன் தொடர்பு டையவை அல்ல என்றும் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் நேற்று முன்தினம் நாடாளுமன்றத்துக்கு அளித்த எழுத்துபூர்வ பதிலில் தெரிவித்தார். "இந்த இரு மரணங்களுக்கான காரணங்களும் சூழ்நிலைகளும் போலிஸ் விசாரணையில் தீர ஆராயப்பட்டு, அதன் தொடர்பான அறிக்கைகள் அரசாங்க மரண விசாரணை அதிகாரியிடம் சமர்ப் பிக்கப்பட்டுள்ளன. "இந்த இரு மரணங்களிலும் எந்த சூதும் இல்லை என்றும் அவை சொந்த உயிரை மாய்த்துக் கொண்ட செயல்கள் என்றும் மரண விசாரணை அதிகாரி தெரி வித்தார். "மேலும் இந்த இரு மரணங்களில் மாண்ட வீரர்களின் மேலதி காரிகள், சகாக்கள், தேசிய சேவை அல்லது பணி போன்றவை காரணங்களாக அமையவில்லை என் றும் மரண விசாரணை அதிகாரி தன் அறிக்கையில் கூறினார்," என்று அமைச்சர் டாக்டர் இங் தமது பதிலில் விளக்கினார்.
2018 ஜூலை, செப்டம்பர் மாதங்களில் இயற்கைக்கு மாறான இரு மரணங்கள்
1 mins read

