'வட்டெயின்' இசைக் குழுவின் நிகழ்ச்சியைத் தடை செய்தது சிங்கப்பூரர்கள் சிலருக்கு அதி ருப்தியை ஏற்படுத்தியுள்ளது என் பதை தாம் அறிந்துள்ளதாகக் குறிப்பிட்ட சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம், நிகழ்ச்சி ஏற்படுத்தும் நீண்டகால விளைவு களை எதிர்கொள்ள அவர்கள் தயாரா என்ற கேள்வியையும் நாடாளுமன்றத்தில் எழுப்பினார். "நீங்கள் எவ்வித நிகழ்ச்சி யைக் கேட்கலாம் அல்லது கேட் கக்கூடாது என்று அரசாங்கம் தலையிட்டுச் சொல்கிறது என்பது இங்கு ஒரு விவகாரம் அல்ல. மாறாக, பெரும்பாலான சிங்கப் பூரர்களின் உணர்வுகளைப் பாதிக் கும் வகையில் 'வட்டெயின்' இசைக்குழு வெளிப்படையான ஒரு நிகழ்ச்சியைப் படைக்க அர சாங்கம் உரிமம் வழங்கலாமா என் பதுதான் இங்கு கேள்வியாக உள் ளது," என்றார் அமைச்சர். "உணர்வுகளைப் பாதிக்கும் 'வட்டெயின்' இசைக் குழுவுக்கு இப்போது உரிமம் வழங்கினால், பிறகு இதுபோன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும் மற்றக் குழுக்களின் நிகழ்ச்சிகளை நாம் தடை செய்ய முடியாது. அந்த வகையில் கேளிக்கை நிகழ்ச்சி என்ற பெய ரில் வெறுப்புணர்வு பிரசாரம் தலைதூக்கும். "நிகழ்ச்சி தடை செய்யப்பட் டதை ஆதரிக்காதோர், பின்னர் வெறுப்புணர்வு பிரசாரம் அல்லது வெறுப்புணர்வு இசை மூலம் நமது சமூகத்தில் இடைவெளி பெருகி, இன, சமய ஒற்றுமைக்கு பாதக விளைவுகள் ஏற்பட்டால் அதை ஏற்றுக்கொள்வார்களா," என்றும் திரு சண்முகம் கேள்வி எழுப்பி னார். "இதுபோன்ற, இஸ்லாம், பௌத்தம் மற்றும் இதர சமயங் களைத் தாக்கும் இசை மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகளை நாங் கள் அனுமதிப்போம் என்று மாற் றுக் கருத்து உள்ளவர்கள் சொல் வார்களா?
"ஒருவேளை அவ்வாறு நினைப்பவர்கள் இருந்தால் அவர் கள் ஒருசிலராகத்தான் இருப் பார்கள். பெரும்பாலான சிங்கப் பூரர்கள் நாட்டின் அமைதியை, ஒற் றுமையைக் குலைக்கும் எந்த நட வடிக்கையையும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். "அதே வேளையில் அனைத்து நிகழ்ச்சிகளையும் அரசாங்கம் தடை செய்யாது. அது நியாய மானதாக உள்ளதா, நடை முறைக்கு ஏற்றதா என்பதை ஆராய்ந்து முடிவெடுக்கும்," என் றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

