இணையத் தாக்குதலுக்கு ஆளான பல நிறுவனங்கள்

இணையத் தாக்குதலுக்கு ஆளான பல நிறுவனங்கள்

1 mins read
3d12a62b-cf92-460e-b2ab-35a569d7f4a9
-

நாட்டிலுள்ள கிட்டத்தட்ட அனைத்து நிறுவனங்களும் கடந்த ஆண்டில் நான்கு முறை இணையத் தாக்குதல்களுக்கு ஆளாகியுள்ள தாக புதிய ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன. அமெரிக்காவின் தனியார் இணையப் பாதுகாப்புச் சேவை நிறுவனமான 'கார்பன் பிளேக்' நடத்திய ஆய்வில் 250 நிறுவனத் தலைவர்களும் நிர்வாகிகளும் இவ்வாறு தெரிவித்திருந்தனர். 'சிங்கப்பூருக்கு மிரட்டல் தொடர்பான அறிக்கை' என்ற ஆய்வின் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டதில் கிட்டத்தட்ட நான்கு விழுக்காடு மட்டுமே இணையத் தாக்குதலால் பாதிக்கப் படவில்லை என்று கூறப்பட்டது. நிதி, சுகாதாரம், அரசாங்கம், உற்பத்தி, ஊடகம் போன்ற பல துறைகளிலுள்ள நிறுவனங்களும் வர்த்தகங்களும் இந்த ஆய்வில் பங்கேற்கத் தேர்வு செய்யப்பட்டன. முதன்முறையாக நடத்தப்பட்டு வெளியிடப்பட்ட இந்த அறிக்கை வழி சிங்கப்பூரின் நிறுவனங்கள் அதிகரித்து வரும் இணையத் தாக்குதல்களால் அதிகளவிலான அழுத்தத்தைச் சந்தித்து வருவ தாக 'கார்பன் பிளேக்' நிறுவனத் தைச் சேர்ந்த திரு ரிக் மெக்எல்ராய் சொன்னார். இவ்வாண்டு ஜனவரி மாதத்தில் நடத்தப்பட்ட இந்த ஆய்வு, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் போன்ற நாடுகளையும் உள்ளடக்கும் ஓர் அனைத்துலக ஆய்வு திட்டத்தின் ஒரு பகுதி. இணையத் தாக்குதல் சம்பவங் களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஆய்வில் 92 விழுக் காட்டு நிறுவனங்கள் தெரிவித்தன. அத்துடன் இத்தாக்குதல்கள் மேன்மேலும் அதிநவீனமடைந்து வருவதாக 95 விழுக்காட்டு நிறு வனங்கள் கூறின.