'பயங்கரவாதத்தை எதிர்கொள்வதில் நாடுகள், தனியார் துறையின் கூட்டு முயற்சி தேவை'

'பயங்கரவாதத்தை எதிர்கொள்வதில் நாடுகள், தனியார் துறையின் கூட்டு முயற்சி தேவை'

1 mins read
95726121-3f36-43e6-8b9d-d787679b3e84
-

எல்லைப் பிரச்சினை தொடர்பாக பயங்கரவாதம் நிகழ்ந்து வந்த நிலை மாறி, இப்போது இணையம் வழி மனிதனின் எண்ணங்களிலும் உள்ளங்களிலும் தாக்கம் ஏற்படுத் தும் நிலைக்குப் பயங்கரவாதத் தாக்குதல் நடந்து வருகிறது. இதை எதிர்கொள்ள நாடுகளும் தனியார் துறையும் இணைந்து செயல்படக் கூடுதல் முயற்சி எடுக்கப்படவேண்டும் என்று நேற்று சிங்கப்பூருக்கு வருகை அளித்திருந்த அமெரிக்காவின் முன்னாள் உள்நாட்டுப் பாது காப்புத் துறையின் செயலாளர் மைக்கல் செர்ட்டொஃப் (படம்) கூறினார். திரு செர்ட்டொஃப் 2005 முதல் 2009ஆம் ஆண்டு வரை தம் செயலாளர் பதவியில் இருந்தவர். தீவிரவாதம் இன்று ஊக்குவிக் கப்பட்ட பயங்கரவாதமாக பரிண மித்துள்ளதாக மரினா பே சேண்ட்ஸ் எக்ஸ்போ, மாநாட்டு மையத்தில் நிகழ்ந்த வட்டாரப் பாதுகாப்பு மாநாட்டின் முதல் நாளன்று சிறப்புரை ஆற்றியபோது திரு செர்ட்டொஃப் பகிர்ந்து கொண்டார். "குறைந்த முன்தயாரிப்பின்றி, பயிற்சியின்றி கையிலுள்ள ஏதாவது ஆயுதத்தைக் கொண்டு தாக்குதல்கள் நடத்த இணையத் தின் வழி ஒருவர் இன்னொருவரைத் தூண்டலாம்.